அமரர் திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு நினைவாக கனடாவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் தாய்வீடு இதழ் நடத்தும் அனைத்துலகத் தமிழ் சிறுகதைப் போட்டி 2017 க்க எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதைகள் கோரப்படுகின்றன.
நாம் அடக்குமுறைகளைக் கண்டும் காணாமலும் ஒரு மாயை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன, மொழி, சாதி, நிற, பெண், பால் அடக்குமுறைகள் பற்றி நாம் நிறைய அறிந்து கொள்ள வேண்டும். மாற்றுப் பத்திரிகைகளையும், மாற்று இலக்கியங்களையும் தாண்டி இந்த சிறுகதைப் போட்டி 1966இல் சங்கானையில் நடந்த சாதி அடக்கு முறைகளுக் கெதிராக குரல்கொடுத்து போராடியவர்களில் ஒருவரான காலஞ்சென்ற திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்களின் நினைவாக இந்த சிறுகதைப் போட்டி நடத்தப்படுகின்றது. அடக்குமுறைகள் பற்றி கதைப்பதற்கும், விவாதிப்பதற்குமான ஒரு தளத்தை ஏற்படுத்துவதே இந்தச் சிறுகதைப் போட்டியின் நோக்கமாகும்.
போட்டி விதிகள்
• உலகெங்கிலும் வாழும் இலங்கைத்தமிழர்கள் இப் போட்டியில் பங்குபற்றலாம்.
• இச்சிறுகதைப் போட்டிக்குப் பக்க வரையறைகள் இல்லை. ஆனால் சிறுகதைக்குரிய வரையறைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
• இச்சிறுகதைப் போட்டிக்குத் தனித்துவமான தலைப்புக்கள் எதுவும் இல்லை. படைப்பாளர் விரும்பிய தலைப்புகளில் எழுதி அனுப்பலாம்
• இச்சிறுகதைகள் அனைத்தும் பாமினி வகை எழுத்துருவிலோ அல்லது யுனிகோட் எழுத்துருவிலோ தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படலாம்.
• ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்
• இப்போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள் யாவும் எற்கனவே வெளிவந்ததாகவோ, மொழிபெயர்ப்பாகவோ, பிற கதைகளின் தழுவலாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறிருப்பின் அவை போட்டியிலிருந்து விலக்கப்படும்.
• சிறுகதைகள் அனைத்தும் ஜுலை 31, 2017க்கு முன்பாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
• இப்போட்டி தொடர்பில் நடுவர் குழுவின் முடிவே இறுதியானதாக இருக்கும்
பரிசுக்குரியவையாகத் தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்குத் தாய்வீடு நினைவுப் பதக்கமும் பணப்பரிசும் வழங்கப்படும்.
1ம் பரிசு : 20ஆயிரம் இலங்கை ரூபா
2ம் பரிசு : 15ஆயிரம் இலங்கை ரூபா
3ம் பரிசு : 10ஆயிரம் இலங்கை ரூபா
7பரிசுகள் : தலா 5ஆயிரம் இலங்கை ரூபாவும் வழங்கப்படும்.
பரிசளிப்பு நிகழ்வு இலங்கையில் நடைபெறும்.
பரிசு பெறும் சிறுகதைகள் தாய்வீடு பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவர இருப்பதுடன் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படவுள்ளது. படைப்புக்களை பின்வரும் ஏதாவதொரு முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இலங்கை முகவரி
டாக்டர் ஓ.கே.குணநாதன், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இல:1ஏ பயனியர் வீதி, மட்டக்களப்பு, இலங்கை. தொ.பே.இல : +94776041503
கனடா முகவரி
Thaiveedu,
P.O.Box # 63581> Woodside
Square, Toronto, ON 1571 Sandhurst
Cir, M1V 1VO, Canada, kpd;dQ;ry; : story@thaiveedu.com

0 Comments:
Post a Comment