மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்று 2016ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும், முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று(02) வெள்ளிக்கிழமை மாலை முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பினால், குறித்து நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதன் போது வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டன.
2016ம் ஆண்டு தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100புள்ளிகளுக்கு மேல்பெற்ற முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மற்றும் முனைக்காடு சாரதா வித்தியாலய மாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடல் கடந்த முனையின் கரங்கள் அமைப்பின் தலைவர் அ.வரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், முனைக்காடு சாரதா வித்தியாலய அதிபர் க.கிருபைராசா, வித்தியாலய ஆசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment