கல்முனையைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளா் எம்.ஐ.எம் முஸ்தபா இன்று (07) அதிகாலை கல்முனையில் தனது (73) வயதில் காலமானார்.
எம்.ஐ.எம் முஸ்தபா, ஊடகத்துறைக்கு அப்பால் ஆசிரியர் சேவை, அதிபர் சேவை, அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர், சாரணர் இயக்கத்தின் மாவட்ட ஆணையார், இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பகுதிநேர விரிவுரையாளா், அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி, ஆசிரியா் பயிற்சி கலாசாலை, நிந்தவூர் சா்வதேச பாடசாலை, சம்மாந்துறை மத்திய கல்லூரி என தென்கிழக்கு பிராந்தியத்தில் சுமாா் 35 ஆண்டுகள் சேவையாற்றியவா்
ஊடகப்பணிக்கான கலாபூஷன விருது, சாரணிய ஜனாதிபதி விருது, உதைபந்தாட்டத்திற்கான தேசிய விருது, கமூக சேவைக்கான டக்டரிய விருது, சாமஸ்ரீ தேச சக்தி விருது, வை.எம்.எம்.ஏ விருது, சாரணிய சா்வதேச விருது என தனது சேவைக்கான பல விருதுகளை பெற்றுக்கொண்டவா்.
இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளா் போரம் இவரது சேவைகளை பாராட்டி விருது வழங்கி கொரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1970 களில் உதைபந்தாட்டத்தில் யங்ரோஸ், பஸார், சண்டோஸ், கிறீன்பீல்ட் முதலிய முன்னணிக் கழகங்களில் விளையாடிவர். குறுந்தூர ஓட்ட வீரராக மெய்வல்லுனர் போட்டிகளில் பிரகாசித்ததனால் 'பறக்கும் குதிரை ' என்றும் அழைக்கப்பட்டாா்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (07) மஃரிப் தொழுகையின் பின்னா் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


0 Comments:
Post a Comment