15 Jun 2017

பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

SHARE
மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் புதன் கிழமை(14) காலை நடைபெற்றது. இதன்போது மஹோற்சவகால குரு சிவஸ்ரீ.கு.ல.மு.மோஹன் சிவாச்சாரியர் தலைமையில் மங்கள் வாத்தியங்கள் முழங்க பக்தர்களின்  அரோகர ஓசையுடன் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று கொடியேற்றம் நடைபெற்றது.


புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலய மஹோற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று கொடியிறக்கமும், மறுநாள் ஞாயிற்றுக் கிழமை(25) பூங்காவனம், பொனூஞ்சல், ஆஞ்சனேயர் மற்றும் வைரவர் பூசைகளுடன் உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.

மஹோற்சவ கிரியா கால நிகழ்வுகளில் செவ்வாய்க் கிழமை(13) மாலை தாமரைக் கேணி ஸ்ரீ மகாமாரி அம்மன் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரைப்பட்டு புதன் கிழமை(14) கணபதி ஹோம சிறப்பு வழிபாட்டுடன் கொடியேற்றம் இடம்பெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை(15) புஸ்ப்பாஞ்சலித் திருவிழாவும், வெள்ளிக்கிழமை(16) கற்பூரச்சட்டித் திருவிழாவும்,  சனிக்கிழமை(17) தமிழ் அர்ச்சனை வழிபாட்டுத் திருவிழாவும், ஞாயிற்றுக் கிழமை(18) சுமங்கலிகள் திருவிழக்குப் பூசையும், திங்கட்கிழமை(19) மங்கலப் பொங்கல் திருவிழாவும், செவ்வாய்க் கிழமை(20) 108 சங்காபிசேகம் மற்றும் மாம்மழத் திருவிழாவும், புதன் கிழமை(21) விசேட பஞ்சமுக அர்ச்சனையும், வியாழக்கிழமை(22) திருவேட்டைத் திருவிழாவும், வெள்ளிக்கிழமை(23) தேர்த் திருவிழாவும், சனிக்கிழமை(24) தீர்த்தோற்சவமும், ஞாயிற்றுக் கிழமை(25) பூங்காவனம், பொனூஞ்சல், ஆஞ்சனேயர் மற்றும் வைரவர் பூசைகளுடன் உற்சவம் நிறைவு பெற்றுள்ளது. 

அருட் கவியரசு பண்டித ஆச்சாரிய விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.இ.எஸ்காந்தன் குருக்களின் ஆசியுடன், சிவஸ்ரீ.கு.ல.மு.மேஹன் சிவாச்சாரியர் தலைமையிலான குழுவினர் கிரியைகளை மேற்கொள்கின்றனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: