15 Jun 2017

காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

SHARE
ஏறாவூர் - வந்தாறுமூலை உப்போடைப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த கே. குமாரசாமி (வயது 40) என்ற விவசாயியே படுகாயமடைந்தவராகும்.

புதன்கிழமை 14.06.2017 அதிகாலை 4 மணியளவில் இவர் உப்போடைப் பிரதேசத்திலுள்ள வயலில் இருந்து வந்தாறுமூலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது இடைவழியில் குறிக்கிட்ட காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளது.

அவ்விடத்தில் காயங்களோடு வீழ்ந்து கிடந்தவரைக் கண்டவர்கள் மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: