16 Jun 2017

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


கிழக்கு  மாகாண முதலமைச்சரின்  அனுசரணையில் வியாழக்கிழமை மாலை 15.06.2017 மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

அங்கு பிரதம அத்தியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மதலமைச்சர்@

30 வருடமாக கொடிய போரால் பாதிக்கப்பட்ட நாம் மீண்டும் இனவாதத் தியால் கருகி பெற்றுக் கொள்ளப்பட்ட சமாதானந்தை இழந்து விடுவோமா என்கின்ற அச்சம் எம்மத்தியிலுள்ளது.

இப்தார் நிகழ்வுகள் இன ஐக்கியத்துக்கு விதை தூவுகின்ற ஒன்றாகவே நான் காண்கின்றேன்.

இலங்கையில் சமீபகால இனவாத முன்னெடுப்புகளின் ஒரு நிகழ்ச்சி நிரலாக புனித றமழான் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தையும் உயிருடைகளையும் அழிக்கின்ற மறைமுக மற்றும் நேரடி நிகழ்வுகள் இருந்து வருவதை நாம் அனுபவித்து வருகின்றோம்.

இந்த இனவாத நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட வேண்டும். எதிர் காலத்தில் இவ்வாறான அசௌகரியங்கள், அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு இனத்துக்கும் எவராலும் இடம்பெறக் கூடாது என்று நாம் திடசங்கற்பம் கொண்டு உழைக்க வேண்டும்.
ஜனாதிபதியும் பிரதமரும் அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற மகிழச்சியான விடயத்தையும் இந்த இனவாத முன்னெடுப்புகள் தகர்த்துவிடப் பார்க்கின்றன.

இனவாதிகளின் உருவாக்கத்தை இந்த நாடு இனி ஒருபோதும் அங்ககீகரிக்கவே கூடாது. அப்படி அங்கீகரித்துக் கொண்டிருந்தால் நாடு அழிவை நோக்கி நகரும் என்பதே யதார்த்தமாகும்.

சிங்களவரும் தமிழரும் முஸ்லிமும் இந்த நாட்டின் விலை மதிக்க முடியாத மனித வளங்கள் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இந்த நாட்டை ஓரணியில் நின்று கட்டியெழுப்ப வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு வலியுறுத்தப்படுகின்ற அதேவேளை நாட்டிலுள்ள ஒரு வீதமான இனாதிகளால் நாடு பிளவுபடக் கூடாது என்பதில் எல்லோரும் அக்கறையாக இருக்க வேண்டும்.

கிழக்கிலே இனவாத செயற்பாடுகள் எமது ஆட்சியிலே தலைதூக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். இந்த விடயத்திலே கிழக்கிலுள்ள பொலிஸார் முழுச் சிரத்தையோடு உள்ளார்கள் அவர்களுக்கு கிழக்கு மக்கள் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும்” என்றார்.







SHARE

Author: verified_user

0 Comments: