மட்டக்களப்பு மாவட்டம் தும்பங்கேணியில் அமைந்துள்ள அமுதசுரபி பால் பாநிடும் நிலையயம் இனம் தெரியத நபர்களஜனால் சனிக்கிழமை இரவு உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..
போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கால் நடைவளர்ப்பாளர்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்து பாலுற்பத்திப் பொருட்களில் ஈடுபட்டுவருலும் தமது அமுதசுதபி பால் பதநிடும் நிலையம் வளக்கம்போல் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பூட்டிவிட்டு சென்றோம். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணியளவில் வந்து பார்க்கும்போது எமது காரியாலயகத்தின் இரண்டு யன்னல்கள் உடைக்கப்பட்டு கழிவுகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டு காரியாலயத்தினுள் இருந்த கால்நடைகளுக்குரிய மருந்துகளும் சேதப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இவ்விடையம் குறித்து வெல்லாவெளி பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் ஞாயிற்றுக் கிழமை இச்சம்பவத்தை நேரில் வந்து பார்வையிட்டுள்ளதோடு விசாரணைகளையும் முன்நெடுத்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்பு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment