24 May 2017

சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் 2 நபர்கள் கைது.

SHARE
சட்டவிரோதமான முறையில் அடைக்கப்பட்ட சிறியரக லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகள் ஞாயிற்றுக் கிழைமை (21) கைப்பற்றப்பட்டதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். இவ்வடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…


அடைக்கப்பட்ட சிறிய ரக லொறி ஒன்றில் 6 பசுமாடுகளும், 2 எருமை மாடுகளுமாக மொத்தம் 8 மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்த பொலிசார் சட்ட ரீதியற்ற முறையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை அறிந்துள்ளனர். பின்னர் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி அவற்றைக் கொண்டு சென்ற 2 நபர்களையும் கைது செய்துள்ளதோடு, மாடுகள் பொலிஸ் பாதுகாப்பில் கட்டப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்நெடுத்து வருவதாக வெல்லாவெளி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: