மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மணல் ஏற்றிய ஒருவரும், நிபந்தனையின்றி மணல் ஏற்றிய ஒருவருமாக 2 போர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் இதற்காகப் பயன்படுத்திய 3 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் பொலிசார் தெரிவித்தனர். இவ்விடையம் குறித்து மேலும் அறியவருவதாவது…
தேவைகளுக்காக சட்ட ரீதியான முறையில் அடையாளம் காட்டுகின்ற இடங்களில்தான் மண்ல் ஏற்ற வேண்டும். இவற்றை விடுத்து சட்ட ரீதியற்ற முறையில் மணல் ஏற்றுவது என்பது விரோதச் செயலாகும். அந்த வகையில் உரிய அனுமதிப்பதிரமின்றி மணல் ஏற்றியவர், மற்றும் நிபந்தனையின்றி மணல் ஏற்றியவர் உள்ளடங்கலான 2 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுக்காகப் பயன்படுத்திய 3 உழவு இயந்திரங்களையும், கைப்பற்றியுள்ளதாகவும், இந்த மணல் மணல் ஏற்றிய விடையம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இவற்றை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment