28 May 2017

வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு நாள் சிசு உயிருடன் மீட்பு

SHARE
பிறந்து ஒரே நாளேயான சிசுவொன்று வீதி ஓரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை 27.05.2017 மாலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது ஏறாவூர் சர்வோதய வீதியில் சிசுவொன்று வீசப்பட்டுக் கிடப்பதைக் கண்ட அவ்வீதியை அண்டி வாழும் மக்கள் சிசுவை பாதுகாப்பாக எடுத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உயிருடன் இருந்த அந்த சிசு மேலதிக பராமரிப்புக்கும் சிகிச்சைகளுக்குமாக உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தாங்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் சிசுவின் தாய் இன்னமும் கண்டறியப்படவில்லை என்றும் கூறினர்.

SHARE

Author: verified_user

0 Comments: