பொருத்தமான இடத்தில் பொருத்தமான விடயங்களை கதையுங்கள் இவ்விடத்தில் கதைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. என மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்கள பொறுப்பதிகாரி இதன்போதே ரீ.தயாளேஸ்வரகுமார் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, தமிழ்த் தேசியக் கூட்டமை;பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீனேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் பிரதி தவிசாளர் ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம் மற்றும் அனைத்து திணைக்களம் சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
களுவாஞ்சிகுடியில் இயங்கிவரும் கள்ளுத் தவறைணையை தடை செய்வது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம் ஆகியோர் மேற்படி கலால் திணைக்கள அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர் இது தொடர்பில் அவர் பதிலளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து பதிலளிக்கையில்
கள்ளுத்தவறணை ஒன்றை மூடுவதற்காகோ, அதன் அனுமதிப்பத்திரத்தை றத்து செய்வதற்கோ எனக்கு அதிகாரம் கிடையாது. இது மத்திய அமைச்சுடன் சம்பந்நதப்பட்ட விடயம். இது வருடாவருடம் வர்த்தகமானி அறிவித்தலின் படி இடம்பெற்று வருகின்றது. இதனை இவ்விடத்தில் கதைப்பதனால் எந்த வித பிரயோசனமும் இல்லை, இதனை நீங்கள் நிதி அமைச்சின் செயலாளரை சந்தித்து கதையுங்கள். இதற்கான முடிவினை இக் கூட்டத்தில் எடுக்கமுடியாது இந்த இடத்தில் கதைப்பது பொருத்தமற்றதும் பிரயோசனம் அற்றதும் ஒன்றாகும் எனது அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகளையே நான் செய்யமுடியும் அதற்கான பதிலினையே நான் வழங்கமுடியும் பொருத்தமான இடத்தில் சென்று பொருத்தமான விடயங்களை கதையுங்கள் இவ்விடத்தில் கதைப்பதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை என அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து துரைரெத்தினம் இவ்வருடத்திற்கான கேள்வி மனுக்கோரலை நிறுத்துங்கள் என தெரிவித்தார். இதற்கு பிரதேச செயலாளர் பதிலளிக்கையில் வர்த்தகமானி அறிவித்தல் விடுக்க வேண்டியது பிரதேச செயலாளரின் பொறுப்பு இதனை நாங்கள் உதாசீனம் செய்யமுடியாது. மற்றும் கேள்விமனுக் கோரலினின்போது குறித்த தொகைக்கு ஒருவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கமுடியும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
பிரதேச செயலளரின் பதில் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் அமீரலி இக் கள்ளுத்தவறணை தொடர்பில் பலதரப்பட்ட பிரச்சினைகள் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது. இவ்வருடம் கேளிவிமனுக் கோருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் ஒன்றை மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பும்படி பிரதேச செயலாளருக்கு ஆலோசனை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்த பிரதேச செயலாளர் அவ்வாறன கடிதம் மதுவரித்தினைக்கள ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை என அவர் இதன்போது பதிலளித்தார் உடனடியாக இப்பிரச்சினையை நிறுத்துங்கள் வேறுபிரச்சினைகளை ஆராய்வோம் என பிரதியமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விவாதங்கள் முடிவுற்று கல்வி, சுகாதாரம், மின்சாரம், வீதிஅபிவிருத்தி, நீர்வழங்கல், கல்வி சம்பந்தமான விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டு பல முடிவுகள் எடுக்கப்பட்டது.





0 Comments:
Post a Comment