11 May 2017

வெல்லாவெளி பிரதேசத்தில் பல விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு.

SHARE
(பழுகாமம் நிருபர்)

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் துரிதகதியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் அனுசரனையில் புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. 
கடந்த 08.05.2017ம் திகதியில் இருந்து தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டம், 40ம் கிராமம், வெல்லாவெளி விவேகானந்தபுரம், 35ம் கிராமம், பலாச்சோலை, பழுகாமம் போன்ற கிராமங்களின் மைதானங்கள் விளையாட்டக்கழகங்களின் வேண்டுகோளின் பிரகாரம் புனரமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.  












SHARE

Author: verified_user

0 Comments: