(றியாத்.எம்.மஜீத்)
கல்முனையில் ஓன்றிணைந்த தொழிற்சங்கங்களின் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் கல்முனை நகரில் பழைய பஸ் நிலையத்தில் (01) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.அஹூவர் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.ஏ.தௌபீக் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
மே தின ஊர்வலம் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியிலிருந்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரை சென்றதுடன் அங்கு மே தின பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இந்த மே தின நிகழ்வில் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கம், சம்மாந்துறை ஆசிரியர் சங்கம், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம், இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கம், கிராம உத்தியோத்தர் சங்கம், முச்சக்கர வண்டி சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள், சிறுகைத்தொழில் சங்கங்கள் ஆகிய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. இதன்போது தொழிற்சங்கங்களுக்கு ஏற்ற பிரேரணைகளும் பிரகடனம் செய்யப்பட்டன.




0 Comments:
Post a Comment