(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) நிதி உதவியுடன் வலய கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடனும் கல்முனை கோட்டக்கல்வி பணிமனையின் வழிகாட்டலின் கீழ், கல்முனை (முஸ்லீம்) கோட்ட கல்வி பிரிவிலுள்ள பாடசாலைகளில் மாதிரி புலமைப் பரிசில் பரீடசை நடைபெறவுள்ளதாக "செசெப்" அமைப்பின் நிதி துறை பணிப்பாளர் எம்.எப்.மர்சூக் அறிவித்துள்ளார் .
மருதமுனை, கல்முனைக்குடி, நட்பிட்டி முனை, இஸ்லாமாபாத், ஆகிய பிரதேசங்களில், தரம் ஐந்தில் கல்வி பயிலும் 15 பாடசாலைகளை சேர்ந்த சுமார் 1100 மாணவர்கள் இம் மாதிரி புலமைப் பரிசில் பரீட்ச்சைக்கு தோற்றவுள்ளதுடன் பரீட்ச்சைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி திங்கள் கிழமை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்ச்சை நிலையங்கள் மற்றும் மேற்பாா்வை கடமைக்குரிய ஆசிரிய ஒழுங்குகள் என்பன குறித்து கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ .எல் .ஏ .சக்காப் உரிய பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.
இப் பரீட்ச்சைக்கு பின்வரும் பாடசாலை மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிட தக்கதாகும்,
அல்-மனார் மத்திய கல்லூரி ,ஷம்ஸ் மத்திய கல்லூரி, அல்-அக்ஷா மகா வித்தியாலயம், அல்-பஹ்றியா மகா வித்தியாலயம்,
அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயம், புலவர்மணி ஷரிபுதீன் வித்தியாலயம், அல்-ஹம்றா வித்தியாலயம், அல்-அஸ்ஹர் வித்தியாலயம், லாபீர் வித்தியாலயம்,அல்-மதீனா வித்தியாலயம், அல்-மினன் வித்தியாலயம், அஸ்-ஷூஹறா வித்தியாலயம், இஸ்லாமாபாத் வித்தியாலயம் ,றோயல் வித்தியாலயம், அக்பர் வித்தியாலயம்.

0 Comments:
Post a Comment