இலங்கை அரசினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்குமுகமாக (27) வடக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வர்த்தக நிலையங்களை மூடிஇன்று வியாழக்கிழமை கர்த்தால் அனுஸ்ட்டிக்கின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரவலாக வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைத் தொகுதிகள், போன்றவை மூடப்பட்டுள்ள இந்நிலையில் அரச மற்றும் தனியார் வங்கிகளும் இயங்கவில்லை. இந்நிலையில் இலங்கைப் போக்குவரத்திற்குச் சொந்தமான அரச போக்குவரத்து பேரூந்து சேவைகள் இடம்பெறுவதோடு, தூரங்களுக்குச் செல்லும் ஒரு சில தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுவடுவதை அவதானிக்க முடிகின்றது.
இருந்த போதிவும், வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகவும், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. இன்றயத்தினம் கர்த்தால் அனுஸ்ட்டிப்புக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, காணாமல் போனவர்களின் மட்டக்களப்பு மாவட்ட உறவினர்களின் அமைப்பு உள்ளிட்ட பல பொது அமைப்புக்கள், வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment