மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய பாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள "ஷம்ஸ் தினம் - 2017 "நாளை (30.04.2017) பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் பழைய மாணவனும் அதிபருமான எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர்களாக இருந்து தற்போது வைத்தியர்களாகவும், தாதியர்களாகவும் மற்றும் சுகாதார பிரிவுகளிலும் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள " சுகாதார வைத்திய முகாம்" இன்று (29) பாடசாலையில் நடைபெறவுள்ளது.
01. தொற்று மற்றும் தொற்றா நோய்
02. பல் வைத்தியம்
03. பொதுச் சுகாதாரம் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான மேலதிக ஆதரவு, ஒத்துழைப்புக்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மருதமுனை வைத்தியசாலை போன்றன வழங்கியுள்ளன.
இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொள்ள முடியும். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த சேவையில் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0 Comments:
Post a Comment