ஒவ்வொரு நாடுகளிலும் மோதல் போக்குகள் இடம்பெற்று வருகின்றன, ஒவ்வொருவரும் தாங்கள் இடும் புள்ளடிக்காகவேண்டி போராட்டங்கள் நடாத்தி வருகின்றார்கள் எமது நாட்டில் அவ்வாறானதொரு நிலமையில்லாமல், சுமுகமான ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தி நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது பிரதான நோக்கமாக இருக்கின்றது. இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். அந்த வகையில் சுயாதின ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவொன்றும் ஏற்படுத்தப்பட்டு மக்களுடைய விருப்பத்pற்கு எற்றாற்போல் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்ப ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் 25 வருட கால அரசியல் வாரலாற்றை எடுத்தியம்பும் கிழக்கு வாசல் எனும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் திங்கட் கிழமை (10) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
இந்த நாட்டில் பாரியதொரு அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொடுக்கின்ற விடையத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள் மக்கள் என அனைவரும் ஒருமித்து போராடி சுதந்திரத்தைப் பெற்றெடுத்தார்கள்.
எனவே இந்த நாட்டில் இனவாதம், மதவாம் போன்ற விடையங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. இவ்வாறான விடையங்கள் வருவதற்கு யாரும் இடமளிக்கவும் கூடாது. எல்லோரும் ஒற்றுமையுடனும், கருணையோடும்,? பாசத்தோடும், பண்போடும் நடந்து கொண்டு இந்த நாட்டின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்.
இந்த நாடு புதிய அபிவிருத்திப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும், சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகின்ற அளவிற்கு முன்னேற்றமடைய வேண்டும், மேலும் சமய ரீதியாகவும், மத ரீதியாகவும் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலமாக இது இருக்கின்றது. புத்த பகவான் ஒருபோதும் இனவாதத்தைப் பற்றியோ அல்லது மத வாதத்தைப் பற்றியோ பேசியதில்லை எல்லோரும் மனிதர் என்ற அடைப்படையில்தான் புத்த பெருமான் பேசியிருக்கின்றார். எனவே இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்து இந்ந நாட்டில் சமாதானத்தைக் கட்டியெழுப்பு வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமை;சசர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment