இலங்கைச் சிறைகளில் வாடுவோரில் கூடுதலானோர் போதையால் உந்தப்பட்டு குற்றச் செயல் புரிந்தவர்களாகவே உள்ளார்கள் என கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும்(Senior Lecturer Head Islamic Studies Eastern University Sri Lanka கல்குடா ஜம்மியதுல் உலமா சபையின் உறுப்பினருமான எம்.ரி.எம். றிஷ்வி தெரிவித்தார்.
மட்டக்களப்பு- கல்குடாவெம்புப் பகுதியில் பாரிய நிலப்பரப்பில் மது உற்பத்தி தொழில்சாலை அமைக்கப்படுவதை உடன் நிறுத்துமாறும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்த மதுச்சாலைகளைக் குறைக்குமாறும், தகவல்களை வெளியிடும் சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் கோரிய தனது அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (12.014.2017) வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இஸ்லாம் மார்க்கம், மது தொடர்பிலான அனைத்துச் செயற்பாடுகளையும் பெரும் குற்றமாக தண்டனைக்குரியதாக கருதுகின்றது.
மது அருந்துவது, விற்பனை செய்வது, வாங்குவது, பிறருக்கு வழங்குவது, சுமந்து செல்வது, அதற்காக எந்தவொரு வகையிலாவது உதவுவது, மது விற்பனைக்காக இடத்தை வாடகைக்கு விடுவது என அனைத்தையும் இஸ்லாம் கண்டிக்கின்றது.
மது, போதை வஸ்த்துக்கள் பாவனை என்பது சமூகப் பிரச்சினையாகும்.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த சமூகத்திற்கு மது ஒரு சாபக்கேடாகும்.
இறைவன் மனிதனை இரண்டு சிறப்பியல்புகளுடன் படைத்துள்ளான் அறிவு, உணர்வு இவை இரண்டுமே மனிதனை சரியான வழியில் ,ட்டுச் செல்கின்றன.
இவை இரண்டும் தவறிழைத்து விடக்கூடாது என்பதற்காக வேதங்களையும் இறைத் தூர்களையும் கொண்டு இறைவன் மனிதர்களுக்கு நல்வழி காட்டியிருப்பதையும் நாம் காணலாம்.
பொதுவாக மனித உணர்வுகள் நல்லதை, கெட்டதை ஏற்கும், வெறுக்கும் இயல்புடையவை.
உண்மையில் எந்தவொரு மனிதனும் அவன் எந்த மதத்தை, இனத்தை, நிறத்தை, தேசத்தை சார்ந்திருக்கின்ற போதிலும், இயல்பில் நல்லதை ஆதரிக்கவும், தீயதை எதிர்க்கவும் செய்கின்ற மன நிலையை கொண்டிருக்கும் பொழுதே அவனுள் மனிதம் வாழ்க்கின்றது என்பது அர்த்தமாகும்.
ஒரு நேரத்தில் வாழும் எந்த மனிதனும் நல்ல மனிதனாகவும் நல்ல பிரஜையாகவும் வாழ்வது கடமையாகும்.
இந்த வகையில் தான் வாழும் தேசத்தினுள் குறிப்பாக தான் வாழும் பிரதேச எல்லையினுள் நல்லதை வாழவைக்க முயற்சிப்பதும், தீயவற்றை ஒழிக்கப் பாடுவதும் நற்பிரஜையின் கடமையாகும்.
எந்தவொரு மதமும் மதுவை, போதைவஸ்துக்களை ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
மது தனிமனித, குடும்ப, சமூக சீர்கேடுகளுக்கு அடிப்படையாகும். ஆன்மீகம், அறிவு, ஒழுக்கம், பண்பாடு, ஆளுமை என அனைத்தையும் இழக்கச் செய்துவிடும் விசமே மதுவும் போதைவஸ்த்துவுமாகும்.
“இவ்வவுலம் அழிந்துபோகும் காலம் மிக நெருங்கி விட்டது. அதற்கான அடையாளங்களாக அறிவு குறைவதும், அறியாமை அதிகரிப்பதும், மதுபாவனை மேலோங்குவதும், விபச்சாரம், பகிங்கரமாகவே இடம்பெறுவதும்” என முஹம்மது நபிகளார் (ஸல்) தீர்க்கதரிசனமாக இவ்வாறு கூறியுள்ளார்கள்.
மதுபோதைப் பாவனை உள்ளத்திற்கும், உடலுக்கும் உணர்வுகளுக்கும் தீங்குதரக்கூடியவை என்பது உளவியல் மற்றும் விஞ்ஞான பூர்வ ஆதாரங்களாகும்.
எனவே இந்த நாட்டின் ஓர் நற்பிரஜை இந்த நாட்டின் நலனில் அக்கறை இருக்கு என்றால் அவன் எப்படி மலேரியா, டெங்கு போன்ற நோய்களை தன் உயிருக்கு ஆபத்தானது எனக் கருதி சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என முயற்சிக்கின்றானோ அதுபோலவே மதுவை ஒழிக்கவும் மனித உயிர்களை பாதுகாக்கவும் சிறந்த சமூகத்தை கட்டிக்காக்கவும், எதிர்கால சந்ததிகளை ஆரோக்கியமானவர்களாக உருவாக்கவும் எமது சூழலில் மது தொடர்பான எந்தவொரு ஏற்பாடுகளோ ஊக்குவிப்புக்களோ, முயற்;சிகளோ கொண்டு வரப்பட்டால் அதனை இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி எதிர்ப்புக்குரல் கொடுத்து எம்மையும் எம் சந்ததிகளையும் காக்க திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment