25 Nov 2025

மட்டு.வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர்பலகை அகற்றப்பட்ட சம்பவம் தவிசாளர் உள்ளிட்டோருக்கு பிணை.

SHARE

மட்டு.வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர்பலகை அகற்றப்பட்ட சம்பவம் தவிசாளர் உள்ளிட்டோருக்கு பிணை.

தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தப்பட்ட, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட , 07 பெயர் பலகை  அகற்றிய சம்பவம் தொடர்பில், தொல்லியல் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தனர். 

அதற்கிணங்க பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர், உள்ளிட்டாருக்கு  இன்று திங்கட்கிழமை(25.11.2025) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிருந்தனர். 

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். 

வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலேயே தொல்லியல் திணைக்களம் சில அறிவிப்பு பலகைகளை நாட்டிய வேளையிலே அவற்றை கழற்றி எறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேயரிலே வாழச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதித்தவிசாளர், உறுப்பினர்கள், அவர்களோடு இருந்த இன்னும் ஒரு பெரியவர், ஆகியோர்களுக்கு எதிராக வாழச்சேனைய பொலிசார் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்கள். 

அந்த வீதியோரத்தில் இருந்த பெரியவவர் ஒருவரையும் கைது  ஞாயிற்றுக்கிழமை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தி இருந்தார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதாக அறிந்து வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், தாங்களாகவே மன்றுத்துக்கு வந்து வழக்கு அழைக்கப்பட்டபோது தங்களை அடையாளப்படுத்தி மன்றிலே முற்பட்டார்கள். 

இவர்கள் அனைவருக்கும் சார்பாகவும் சக கனிஷ சட்டத்தரணிகளோடு நான் ஆஜராகி இருந்தேன். 

இவ்வழக்கிலே ஒரு வீட்டிலிருந்து அல்லது ஒரு கட்டடத்திலிருந்து அல்லது ஒரு கப்பலில் இருந்து ஏதாவது ஒரு பொருள் திருடப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 369 ஆது பிரிவு சொல்கின்றது. அந்தப் பிரிவின் கீழ்தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இரண்டாவதாக 410, 417, என்கின்ற பிரிவுகளும் பொலிசாரின் அறிக்கையிலே காட்டப்பட்டிருக்கிறது. அதிலும் இந்த வழக்கோடு அதற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. என்பது மட்டுமல்லாமல் அந்த பிரிவுகளிலேயே சொல்லப்பட்ட விடயம் ஒரு பொது உத்தியோகத்தர், அல்லது அரச உத்தியோகத்தர், தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரு விடயத்தை செய்தால் அல்லது பலகையை நட்டால் அதனை அப்புறப்படுத்துவது அல்லது சேதப்படுத்துவது என்பது ஒரு குற்றம் என கூறப்பட்டிருக்கிறது. 

மன்றிலே இந்த சந்தேகம் நபர்கள் சார்பிலே விடயங்களை முன்வைத்தபோது நான் சுட்டிக்காட்டியது திருடப்பட்டது என்பது எந்த காலத்திலும் இங்கு நிறுத்தப்பட முடியாது. ஏனெனில் இது வீதியில் இருந்து திருடப்பட்டதாகத்தான் பொலிசார் சொல்லுகின்றார்கள். சட்டத்திலே அந்த பிரிவிலே அப்படியாக சொல்லப்பட்டிருக்கவில்லை வீட்டிலிருந்து அல்லது கட்டடத்தில் இருந்து அல்லது கப்பலில் இருந்து திருடப்பட்டதாக இருக்க வேண்டும். ஆகவே அது பொருத்தமற்ற ஒரு குற்றச்சாட்டு ஆகும். 

அடுத்த குற்றச்சாட்டும்கூட ஒரு அதிகாரத்தின் கீழே செய்யப்பட்ட சம்பவமாக இருக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக பிரதேச சபை 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க சட்டத்திலேயே 21 ஆம் பிரிவிலே இருந்து ஆரம்பிக்கும் பகுதியிலேயே பிரதேச சபைகளுக்கான அதிகாரங்கள் பாகம் மூன்றில் சொல்லப்பட்டிருக்கின்றது. அதிலே பொது வழிகள் பற்றிய தத்துவங்களும் கடமைகள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றது.

வீதி, ஒரு பொது வழி, ஆகவே வீதி போன்ற பொது வழிகளிலே யாருக்கு அதிகாரம் சட்டத்தினாலே கொடுக்கப்பட்டிருக்கின்றது எனப் பார்த்தால் அது அந்தப் பிரதேச சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தவிசாளர் அந்த சபையினுடைய பிரதான நிறைவேற்று உத்தியோத்தர். சட்டத்தினால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை உடையவர் அந்த அதிகாரத்தின் கீழே செய்யப்பட்ட ஒரு சம்பவத்தை அகற்றினார் என்று எக்காலத்திலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. ஏனெனில் அந்த குறியீட்டை அல்லது பெயர்ப்பலகையை நடுவதற்கான அதிகாரம் உள்ளுராட்சி மன்றத்துக்குதான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வேறு எவருக்கும் அல்ல ஆகையினால் உள்ளுராட்சி மன்றத்தின் உடைய நிறைவேற்றி அதிகாரி அந்த குற்றத்தை செய்தார் என கூற முடியாது. 

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத்தினுடைய அனுமதியை பெற்றுத்தான் தொல்லியல் திணைக்களம் ஏதாவது ஒரு அறிவிப்பு பலகையை நட முடியும் என்பதை சுட்டிக்காட்டியபோது தொல்லியல் திணைகள் அதிகாரிகள்தான் முறைப்பாட்டாளர்கள் அவர்களிடத்தில் வினவியபோது அவர்கள் முறையாக அனுமதியை கோருவதற்கு இணங்கினார்கள். அதனடிப்படையிலே முறையாக அவர்கள் அனுமதி கோரினால் சபையிலே அதற்கான அனுமதியை வழங்கப்பட்டால் அதனை மீள அந்த இடத்திலே நிர்மாணிப்பதற்கு நாங்கள் வணங்குகின்றோம் என்று சொன்னதன் அடிப்படையில் வழக்கு சுமூகமாக தீர்க்கப்படலாம் என்ற காரணத்தினாலும் பொலிசார் தெரிவித்திருக்கின்ற குற்றங்கள் சம்பந்தமான பிரிவுகள் பிணை வழங்கக்கூடிய பிரிவுகளாக இருக்கின்ற காரணத்தினாலும் இன்று இலகுவான பிணையிலே செல்வதற்கு ஐந்து பேரையும் இன்றைய தினம் அனுமதித்து இருக்கிறது. 

டிசம்பர் 15ஆம் திகதி இந்த வழக்கு மீழவும் அழைக்கப்படும் அதற்குள்ளே இந்த தொல்லியல் தொலைக்களத்தினர் தங்களுடைய அனுமதி கோரலை செய்வார்கள் எனவும் வாழச்சேனை உள்ளுராட்சி மன்றம் அதை சாதகமாக பரிசீலிக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாலும், அடுத்த தவணைக்கு உள்ளே இது சுமுகமாக தீர்க்கப்படலாம் என்ற நம்பிக்கையும் இன்று வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையிலே சந்தேகம் அவர்களாக பெயரிடப்பட்டவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பிரதேச சபையின் அனுமதியோடு பெயர் பலகைகளை நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அது முடிவுறுத்தப்படுமானால் டிசம்பர் 15ஆம் திகதி இந்த வழக்கும் ஒரு முடிவுக்கு வரும் என இதன்போது முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.





























SHARE

Author: verified_user

0 Comments: