மட்டக்களப்பு கல்குடா பகுதியில் மதுபான கருப்பொருள் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருவது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும், அரசியல் தலைவர்களும் அது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் பல வேண்டு கோள்களை விடுத்தும், தொடர்ந்து அத்தொழிற்சாலையின் பணிகள் நடைபெறுவதாகவும் அறிகின்றேன்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை ( வெள்ளிமலை) தெரிவித்தார்.
திங்கட் கிழமை (10) இவ்விடையம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் குpறப்படுகையில்…..
இந்த நல்லாட்சி அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்ட மக்களை நேசிக்கின்ற அரசாங்கமாக இருந்தால் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக 2000 இத்திற்கு மேற்பட்டோர் தொழில் புரிந்து அவர்களது ஜீபநோபாயத்தைக் கழித்து வந்த வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை, தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் வந்த பின்னர் மூடிவிடப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களால் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கம், இவற்றினைக் கருத்தில் கொண்டு கிழக்கிலங்கையில் பெயர்பெற்ற வாழைச்சேனைக் கடதாசி ஆலையை மீள் புணருத்தாரணம் செய்து நவீனத்துவ வசதிகளுடன், மறுமலர்சியடையச் செய்யுமாக இருந்தால், சுமார் 5000 இத்திற்கு மேற்பட்டோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும்.
அதுபோன்று கிழக்கு ஆசியாயாவிலே பெயர்பெற்ற அரிசிஆலை ஒன்று சவளக்கடை எனும் இடத்தில் இருந்தது அதுவும் கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டு தற்போது மூடப்பட்டுக் கிடக்கின்றது. இதபோன்ற அரிசி ஆலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவுவதற்குரிய நிலவளமும், நிர்வளமும் உள்ளன. இலங்கையிலே அதிகளவு வேளாண்மைச் செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதனாலும், அதுபோன்ற அரிசிஆலைகளை நிறுவும் பட்சத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க முடியும்.
பல இடங்களில் தொழில் பேட்டைகள் இந்த நல்லாட்சி அரசிங்கத்தால் அமைக்கப்படுவதாக அறிகின்றோம், ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசகாணிகள் நீர் வளம் போன்றன இருந்தும் எந்த வித தொழில் பேட்டைகளும் அமைக்கப்படவில்லை என்பது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் மனதை மென்மேலும் துன்புறுத்துகின்ற நடவடிக்கையாகக் கருதுகின்றேன்.
எனவே இவ்வாறான விடையத்தில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கரிசனை செலுத்தி செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment