29 Apr 2017

அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எஸ். அபுல் கலீஸ் சீனா பயணமானார்.

SHARE
அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ். அபுல் கலீஸ் வியாழக்கிழமை(27.04.2017) சீனா பயணமானார். விவசாய தொழினுட்பங்கள் தொடர்பாக சீனாவில் நடைபெறவுள்ள இரண்டு மாத கால வதிவிட பயிற்சிநெறி ஒன்றில் பங்குபற்றுவதற்காக எம்.எஸ். அபுல் கலீஸ் சீனா சென்றுள்ளார்.
மருதமுனையின் முதல் விவசாய விஞ்ஞான இளமாணிப் (BSc) பட்டதாரியாக உள்ள இவர், இலங்கை விவசாய சேவைகள் (SLAgS) மற்றும் இலங்கை விஞ்ஞான சேவைகள் (SLScS) போன்ற பரீட்சைகளில் தோற்றி சித்தி பெற்றுள்ளதோடு, கடந்த 2013 ஆம் ஆண்டில் தனது முதுமாணி (MSc) கற்கை நெறியினை அபிவிருத்தியும் விரிவாக்கலும் எனும் துறையில் நிறைவுசெய்தவராவார்.
அத்தோடு, 1996ஆம் ஆண்டில் இந்தோனேசிய நாட்டுக்கும் 2003ஆம் ஆண்டில் சீன நாட்டுக்கும் 2008ஆம் ஆண்டில் மலேசிய நாட்டுக்கும், இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டில் கொரிய நாட்டுக்கும் இது போன்ற பயிற்சி நெறிகளுக்காக இவர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: