மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய பாணவர்கள் ஏற்பாடு செய்த சுகாதார வைத்திய முகாம் இன்று நடைபெற்றது.
"ஷம்ஸ் தினம் - 2017 "நாளை (30.04.2017) பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் பழைய மாணவனும் அதிபருமான எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் திட்டமிடல் பணிப்பாளா் எஸ்.அன்வரதீன் அரங்கில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர்கள் தற்போது வைத்தியர்களாகவும், தாதியர்களாகவும் மற்றும் சுகாதார பிரிவுகளிலும் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த " சுகாதார வைத்திய முகாம்" இன்று (29) பாடசாலையில் நடைபெற்றது.
01. தொற்று மற்றும் தொற்றா நோய்
02. பல் வைத்தியம்
03. பொதுச் சுகாதாரம் போன்ற சேவைகள் இங்கு வழங்கப்பட்டன.
இதற்கான மேலதிக ஆதரவு, ஒத்துழைப்புக்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மருதமுனை வைத்தியசாலை போன்றன வழங்கியிருந்தது.
இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் போன்ற 300க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த சேவை குறித்து பாடசாலையின் பழைய மாணவரும் பிறை எப்.எம்.நிலையக் கட்டுப்பாட்டாளருமான அல்-ஹாஜ் பஸீர் அப்துல் கையும் இலங்கை வானொலி பிறை எப்.எம் இல் நேரடி அஞ்சல் செய்தாா். பழைய மாணவா்களான மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், மட்டக்களப்பு பிராந்திய பல்வைத்திய அதிகாரி டாக்டர். எம்.பி.ஏ.வாஜித், அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் கல்முனை மாநகர ஆணையாளர்.ஜே.லியாக்கத்அலி, சட்டத்தரணிகளான.எம்.சி.எம்.நவாஸ், எம்.எம்.றமீஸ், பொறியியலாளா்களான எம்.ஏ.யாசிர் றஸ்மி, ஜவ்பர், துறைமுக அதிகார சபை உத்தியோகத்தா் ஏ.எச்.நைசா் உட்பட உயா் அதிகாரிகள், மாணவா்கள்,ஆசிரியா்கள், பெற்றோா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.
0 Comments:
Post a Comment