30 Apr 2017

மதில் சரிந்து விழுந்து ஏழு வயதுச் சிறுமி பலி

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில் அச்சிறுமி மரணமடைந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


சனிக்கிழமை 29.04.2017 பகல் நடந்த இச்சம்பவத்தில் செல்வி படமாளிகை வீதியைச் சேர்ந்த சண்முகராசா ஷாறுக்கா (வயது 7) என்ற சிறுமியே மரணமடைந்துள்ளார்.

சிறுமியும் தனது சகோதரனும் விளையாடிக் கெசாண்டிருக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த மதில் கடந்த 4 நாட்களுக்கு முன்னரேதான் கட்டி முடிக்கப்பட்டது என்று வீட்டுரிமையார்கள் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த சிறுமியை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் ஏற்கெனவே சிறுமியின் உயிர் பிரிந்து விட்டிருந்ததாக வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: