24 Apr 2017

தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதில் எட்டுவதற்கு இலங்கையின் பாரிய கூட்டுறவுத் துறை பக்கபலமாக அமையும் - அமைச்சர் ரிஷாட்வியட்னாமில் தெரிவிப்பு!

SHARE
இலங்கை அதன் 2030 ஆம் ஆண்டை நோக்கிய தேசிய நிலையான வளர்ச்சி  இலக்கு திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதற்கு அதன் பாரிய கூட்டுறவுத்துறையினை இணைத்துள்ளதுஅரசாங்கமும் கூட்டுறவு அமைப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நமது தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை நாம்எளிதாக அடைய முடியும் என்பதை நான் வலியுறுத்துகிறேன.; இலங்கையின் கூட்டுறவு நிறுவனங்கள் பல துறைகளில் செயற்பட்டு வருகின்றனஇவை சமூகஅடிப்படையிலான அமைப்பாக இருந்து நிலையான வளர்ச்சி இலக்குக்கு ஆதரவளிக்க முடியும்  என தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார்.


கடந்த வாரம் வியட்னாம் ஹனோய் மாநிலத்தில் 'நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் வலுவான பங்;குடைமையினைஅரசாங்கம் மற்றும் கூட்டுறவுபங்குதாரர்களுக்கிடையில் மேம்பாடுத்தல்என்ற தொனிப்பொருளில் 2017 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.

இம் மாநாட்டில் கலந்துக்கொண்ட சர்வதேச அமைச்சர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்இலங்கை கூட்டுறவுத் துறையின்பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் தற்போது இலங்கை அதன் தேசிய கூட்டுறவு கொள்கை வகுப்பீட்டு உருவாக்க வேலைத்திட்டத்தின் இறுதி கட்டத்ததைஅடைந்து வருகிறது என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். 1906 ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் இலங்கையின் முதலாவது கூட்டுறவு சங்கம்அமைக்கப்பட்டது.

பல தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்கள் இன்று இலங்கையின் கூட்டுறவுத்துறையினை இன்னும் மையப்படுத்தப்பட்டதாகயில்லைஇதுஒரு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய விடயமாகும்மத்திய அரசின் இவ்விடயத்திற்குரிய அமைச்சர் என்ற ரீதியில் தேசிய கூட்டுறவு கொள்கை வகுப்பீட்டு உருவாக்கம்எனக்கு ஒரு முக்கிய பொறுப்பு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்மாகாண அமைச்சர்கள்மாகாண கூட்டுறவு திணைக்களங்கள் மற்றும் மாகாண மட்டகூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுக்களுடன் நாங்கள் கூட்டிணைந்து செயற்படுகின்றோம்.

கூட்டுறவு துறையை பாதுகாப்பதற்காக கொள்கைகள் மற்றும் மதிப்புகள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் கூட்டுறவு அமைப்புக்கும் இடையே கூட்டிணைந்த
புரிந்துணர்வுபாலினம் மற்றும் இளைஞர் போன்ற பொருத்தமான காரணிகளுக்கான ஒத்துழைப்பு என்பன் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.  இந்த மாநாடு 2030இலக்குகளை எதிர்நோக்குகிறதுஇதனால் அரசாங்கமும் கூட்டுறவு அமைப்பும் ஒன்றாக செயற்படுவதுடன் மூலம் நமது தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளைஎளிதாக அடையலாம் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

தற்போது தெற்காசிய நாடுகள் மத்தியில் அபிவிருத்தி கலந்துரையாடல்களின் போது பாலின விடயம் முக்கியத்துவம் பெறுகின்றதுகொள்கை திட்டம் மற்றும்பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை கூட்டுறவு அமைப்புடன் இணைந்து செயல்படுத்துவது நிலையான வளர்ச்சி இலக்கு வெற்றிக்கு ஒருநெம்புக் கோலாக அமைய முடியும்தற்போது தலைவர்கள் மற்றும் உயர் முகாமைத்துவ மட்ட அதிகாரிகள் மத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும்குறைவாகவேயுள்ளது.

இலங்கையின் கூட்டுறவு துறை செயற்பாடுகள் விவசாயம்நுகர்வோர்.உற்பத்திசுகாதார சேவைகள் கைத்தொழில் நிதி எரிபொருள் விநியோகம் பெண்கள் மற்றும்இளைஞர்கள் மீது முழுமையான ஈடுபாடு  இருப்பதால் நிலையான வளர்ச்சி இலக்குக்கு சமூக அடிப்படையிலான இயக்கமாக ஒத்துழைக்க முடியும்.

நாடளாவிய ரீதியில் காணப்படும் 14500 க்கும் மேற்பட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு சேவைகளை வழங்குவதற்காக எனது  அமைச்சு சர்வதேச தொழிலாளர்அமைப்பின் ஆதரவோடு இலங்கையின் முதலாவது தேசிய கூட்டுறவு கொள்கையை முழு முயற்சியுடன் இறுதி செய்ய முயல்கிறதுஎமது கொள்கை வகுப்பீட்டுவேலைகள் முடிவடைந்தவுடன் இலங்கையின் கூட்டுறவு அமைப்பானது நிலையான அபிவிருத்தி இலக்குகளின் சாதனைகளை விரைவாகவும் சிறப்பாகவும்ஆதரிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்மற்றொரு காரணம் நிலையான வளர்ச்சி இலக்கினை முன்னெடுக்க இலங்கை கூட்டுறவு அமைப்பின் பலத்தினைபயன்படுத்த முடியும் என நாம் நம்புகின்றேன்.  இலங்கையின் மொத்த குடிதொகை சுமார் 21 மில்லியன் ஆகும்அதில்  கிட்டத்தட்ட 8 மில்லியன் பேர் நாட்டில்கூட்டுறவு செயற்திறன்  உறுப்பினராக உள்ளனர்.  நாடு முழுவதும் உள்ள  09 மாகாண கூட்டுறவு அமைச்சர்கள,; 09 கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களங்கள் மற்றும் 09மாகாண கூட்டுறவு ஊழியர்  ஆணைக்குழுக்கள் ஆகியன மாகாண சபைகளின் கீழ் இயங்குகின்றன.

இன்றைய நிகழ்விலிருந்து நாம் எடுத்துக்கொள்ளும் பாடங்கள்அனுபவங்கள் வருங்காலத்தில் இலங்கையின் கூட்டுறவு துறைக்கு மதிப்புமிக்க உள்ளீடுகளாகமாறும் என்பதில் எனக்கு எவ்;வித சந்தேகமும் இல்லை என்று கூறி அமைச்சர் தனது உரையை நிறைவுசெய்தார்.



மிகப்பெரிய கூட்டுறவு கொள்கை வகுப்பீட்டு உருவாக் பொறுப்பாளராகவும,; சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உதவியுடன்இலங்கையின் முதலாவது தேசியகூட்டுறவு கொள்கை உருவாக்கத்தினை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர   அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்போதுதனது  உத்தியோகபூர்வ அரசஅதிகாரிகளுடன் 

SHARE

Author: verified_user

0 Comments: