(பழுகாமம் நிருபர்)
கர்ப்பிணித்தாய்மாருக்கு மாதாந்தம் உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வுணப்பொருட்கள் தரமற்றவையானவை பலநோக்கு கூட்டுறவு சங்கம் வழங்குகின்றது என அநாமோதய இணையத்தளத்தில் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தி வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக அப்பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் சி.யோகேஸ்வரன் வினவிய போது 'அப்பொருட்கள் தொடர்பாக நான் சென்று சிபார்சு செய்ததன் பிரகாரம் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் எழுத்து மூலம் கொடுக்கப்படாத தகவலின் அடிப்படையில் மீண்டும் சென்று பார்த்தபொழுது என்னால் சிபார்சு செய்யப்பட்ட பொருட்களே வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. இதுதொடர்பாக பிழையான செய்தியினை அநாமோதய இணையத்தளம் வெளியிட்டுள்ளது. நாங்கள் மக்களுக்கு சரியான நேர்மையாக சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கினறோம் என மேலும் தெரிவித்தார்.'
மேலும் இது தொடர்பாக ப.ம.ந.கூட்டுறவு சங்க தலைவர் சி.ராமகிருஷ்ணனிடம் வினவிய போது 'மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ்தான் இவ்வுணவுப் பொருட்கள் வழங்கப்படுகினறன எனவும், கர்ப்பிணித்தாய்மாருக்கு விநியோகிக்கப்படும் உலர்உணவுப்பொருட்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் சிபார்சின் பின்னர் தான் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்ததுடன் இப்பிரதேசத்தில் சிறந்த குறைவான கட்டுப்பாட்டு விலைகளில் மக்களுக்கு பொருட்களை விற்பனை செய்கின்றோம் எனவும் தெரிவித்தார்

0 Comments:
Post a Comment