24 Apr 2017

பெரியகல்லாறு வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டு விழா

SHARE
பெரியகல்லாறு வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டு விழா துறைநீலாவணை பொது விளையாட்டுமைதானத்தில் முகாமையாளர் பூபாலப்பிள்ளை-தவேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (23.4.2017) பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணீதரன்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்
வே.வரதராஜன்,உட்பட ஆலையத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள்,துறைநீலாவணை மத்திய விளையாட்டு கழகத்தினர்,மகளீர் அமைப்புக்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.


இதன்போது சித்திரை விளையாட்டுக்களான வழுக்குமரம் ஏறுதல்,தேங்காய் திருவுதல்,கிடுகுபிண்ணுதல்,சமநிலை பேணுதல்,முட்டி உடைத்தல்,பொல் சுற்றி ஓடுதல், திருமணமாகாத,திருமணமான பெண்களுக்கிடையிலான கயிறுயிழுத்தல் போட்டி,மீட்டாய் ஓட்டம்,சோடாகுடித்தல் போட்டி,சைக்கிள் மெல்லோட்டம்,நீர்நிரப்பப்பட்ட பலூணை மாற்றுதல்,வினோதயுடைப்போட்டி, போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.இவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டி முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பெறுமதியான பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.









SHARE

Author: verified_user

0 Comments: