இந்நிலையில் அரசினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்குமுகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்வரும் சித்திரை மாதம் 27 ஆந் திகதி வியாழக்கிழமை தங்கள் மாவட்டத்தில் கதவடைப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே! காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான போராட்டம் ! , சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டம் ! , அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய போராட்டம் ! , வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !
முதலான போராட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலே நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்ற போதிலும் இப்போராட்டங்கள் அரசினால் இதுவரையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் அரசினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்குமுகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்வரும் சித்திரை மாதம் 27 ஆந் திகதி வியாழக்கிழமை தங்கள் மாவட்டத்தில் கதவடைப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.
எனவே அதே தினத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை மூடி எம்மக்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment