அரசினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்குமுகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கதவடைப்புப் போராட்டத்திற்கு தாம் முழு ஆதரவையும் வழங்குவதாகவும், இதற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒத்துழைப்பு வழங்கி ஆதரவினை வழங்குமாறும் வேண்டுகோள் விடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட காணாமல் போனவர்களின் உறவுகளின் தலைவி அ.அமலநாயகி செவ்வாய்க் கிழமை (25) தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..
பல வருடங்களாக நாம் போராட்டங்களை நடாத்தியும், பல முறைப்பாடுகளைத் தெரிவித்தும், பல காரியாலயங்கள், ஏறி இறங்கியும், காணாமல் போன எமது உறவுகளுக்கு இதுவரையில் எதுவித பதிலும் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த அரசாங்கம் எமக்கு எதுவித தீர்வும் பெற்றுத்தராத நிலையில் தற்போதைய நல்லாட்சி அரவாதங்கமாவது எமது உறவுகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தரும் என நம்பியுள்ள எமக்கு இதுவரையில் எதுவித பதில்களும் அற்ற நிலையில் எமது பிள்ளைகளுடன் அப்பா எப்போது வீடு வந்து சேருவார் என்ற ஏக்கத்துடன் வாழ்வைக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கவைக்கும் முகமாக எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாட்ட மக்கள் ஏற்பாடு செய்திருக்கின்ற கதவடைப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி அன்றயத்தினம் வர்த்தக நிலையங்களை மூடி, தனியர் பொதுஅமைப்புக்கள் என அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி எமது காணாமலாக்கப்பட்ட உறவுகளை மீட்டும் போராட்டத்திற்கு பங்கேற்குமாறு அன்பாக அடைப்பு விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment