மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னால் திங்கட்கிழமை பிற்பகல் (24.04.2017) இடம்பெற்ற இவ்விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளதுடன் குறித்த இரு வாகனங்களும் சேதமைடைந்துள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற நபர் மது போதையில் இருந்ததை அறிந்த பொலிஸார் அவரது உடல் நிலை குறித்து பரிசோதனையில் ஈடுபட்டதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments:
Post a Comment