வடக்கில் மட்டும் தமிழரசுக் கட்சி வளர்;ச்சி பெற்றிருந்த நேரத்தில் கிழக்கில் கட்சி கொள்கைகளை பரப்புவதற்கு இராஜதுரை அவர்கள் உதவி புரிந்திருந்தார்.
தமிரசுக்கட்சி 1949 ஆம் ஆண்டு ஆரம்பித்த பொழுது நாங்கள் இப்பொழுதும் மட்டக்களப்பிலே இந்த மண்டபத்திலே தந்தைசெல்வா மீது எவளவு பற்றுதலை வைத்துள்ளார் என்பது எடுத்துக் காட்டாக உள்ளது. உண்மையில் வடக்கில் மட்டும் தமிழரசுக் கட்சி வளர்;ச்சி பெற்றிருந்த நேரத்தில் கிழக்கில் கட்சி கொள்கைகளை பரப்புவதற்கு இராஜதுரை அவர்கள் உதவி புரிந்திருந்தார்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியிக் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தந்தை செவ்வாவின் 40வது நினைவு தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30.04.2017) மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது. இம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
பட்டிருப்பு தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான இராசமாணிக்கம் அவர்கள் மகா நாடுகளில் நான்கு தடவைகள் தெரிவு செய்யப்பட்டார் இதன் பின்னர்தான் தந்தை செல்வா பெரும் தலைவராக போற்றப்பட்டார்.
1961 காலப்பகுதியில் இடம் பெற்ற சத்தியாக்கிரத்தின் நானும் மாணவனாக இருந்த போது பங்குபற்றியிருந்தேன் அக்காலத்தில் இடம் பெற்ற சம்பவங்களை நான் நினைத்து பார்;க்கின்றேன். கிழக்கு மாகாணத்தின பல பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் அந்த உண்ணாவிரதத்திலே பங்கேற்றுக் கொண்டமை இன்னும் கண்முன்னே இருக்கின்றது. அந்த காலதம்தில் இருந்தே தமிழர் தாயகத்தில் முஸ்லிம்களுக்கும் பங்கு உள்ளதை தந்தைசெல்வா கூறியிருந்தார் அக்காலத்தில் இருந்தே இது மலர்ந்து வந்துள்ளது இந்த தமிழர் தாயக பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கம் சொந்தமானது என்பதனை கூறியிருக்கின்றார் அஷ்ரப் கூட தமிழர் விடுதலை கூட்டணி ஊடாகவே அரசியலுக்க பிரவேசித்திருந்தார் அவர் இறக்கும் வரை எங்களுக்கம் அவருக்கும் எந்தவித முருண்பாடுகளும் ஏற்பட்டதில்லை.
இப்பொழுது தமிழரின் தாயம் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியது என்ற தந்தை விட்டுச்சென்ற விடயத்தில் சிலர் முரண்பட்டு நின்றாலும் தற்போதைய தலைவர் சம்பந்தன் அவரகளும் அவர்வழியில் செயற்பட்டு வருகின்றார் பலதடவைகள் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் அநியாயங்கள் நடந்த போது பல தடவைகள் அதனை இந்த ஜனாதியிடம் முஸ்லிம் தலைவர்களுடன் சென்று அரசுக்கு சுட்டிகாட்டியுள்ளார் இதனை பல முஸ்லிம் மக்கள் பாராட்டியும் உள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணம் ஏன் இணைந்திருக்க வேண்டும் எனடபதனை 1949 ஆண்டு தந்தை செல்வா மிகவும் தெளிவாக சுட்டிகாட்;டியருக்கின்றார் யாழ்ப்பாணம் தமிழர்களை நிறைவாக கொண்ட பிரதேசம் ஆனால் கிழக்கு மாகாணத்தில் அவட்வாறில்லை பல இனத்தவர்கள் வாழ்;கின்றனர் இங்கு தமிழரின் பலம் குiறாக இருக்கின்றது கிழக்கு மாகாணத்தின் பலத்திற்துணையாக வடக்குமாகாண மக்களின் பலம்கொடுக்கப்பட வேண்டும் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டதன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
வட்டுக் கோட்டைதீர்மானத்தை பகிரங்கமாக பிரசாரம் செய்ததன் காரணமாக பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இக்காலத்தில் நோயோடு தமிழ் மக்களின் விடுதலைக்காக உறுதிவரை உழைத்த ஒரு தலைவராக நாங்கள் பாரக்கின்றோம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர்கைது செய்யப்பட்டிருந்தபோது. இதற்கு எதிராகவும் வழக்கில் வாதாடியிருந்தார், ஜரோப்பியர்களிடம் இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்கு எமது மக்கள் உரித்துடையவர்கள் என்று அன்றே எடுத்தியம்பி இருந்தார் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment