2 Apr 2017

எச்சரிக்கும் வகையில் வியாபித்து வருகிறது ஓட்டிஸம் நலக்குறைபாடு சிரேஷ்ட உளநல மருத்துவர் பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார்

SHARE
“தற்சிந்தனை" அல்லது “தற்புனைவு ஆழ்வு" என்று பொதுவாகவே அழைக்கப்படும் ஓட்டிஸம் என்பது இப்பொழுது இலங்கையிலும் அதிகரித்து வருகிறது, ஆனால் மக்களை நெருங்கியிருக்கின்ற இந்த பாதிப்புப் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் பரவலாக எல்லோரையும் சென்றடையவில்லை என மட்டக்களப்பு மாவடிவெம்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.


ஏப்ரில் 02ஆம் திகதி சர்வதேச ஓட்டிஸம் விழிப்புணர்வு தினமாகும்.“சுயாதீனமாக வாழ்வதற்கான உரிமையை நோக்கி நடைபோடுதல்Toward Autonomy and Self Determination) என்பது இந்த வருட ஓட்டிஸ தினத்தின் தொனிப் பொருளாகும்.
ஓட்டிஸம் பற்றி விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது@ ஓட்டிஸம் என்பதற்கு“தீரனியம்” என்ற நாமத்தை நாங்கள் சூட்டியுள்ளோம்.

மட்டக்களப்பிலும் பல குழந்தைகள், சிறுவர்கள் ஓட்டிஸத்தினால் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பிலும் இந்த ஓட்டிஸப் பாதிப்பின் தாக்கம் இருப்பதன் காரணமாக அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு“தீரனியம் - ஓட்டிஸம்” சிறுவர் பாடசாலை என்ற பெயரில் ஓட்டிஸத்தினால் பாதிக்ப்பட்ட சிறுவர்களுக்கான திறந்த பயிற்சிப் பாடசாலையொன்று ஏப்ரில் 08ஆம் திகதி சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஜெயசுந்தர பண்டாரவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் கிழக்கு மாகாணத்தில் ஓட்டிஸத்தினால் பாதிப்பிற்குள்ளானவர்கள் முதன் முறையாக மட்டக்களப்பில் பயன் பெறுவதோடு அவர் தம் பெற்றோர், ஆசிரியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சிகளை வழங்க ஏதுவாக இருக்கும்.

ஓட்டிஸத்தினால் ஒருவர் பாதிக்கப்படும்போது சாதாரணமாக ஒருவரால் செய்யப்படுகின்ற நாளாந்த செயற்பாடுகள், ஏனையவர்களுடனான உறவுகள், பரஸ்பர உரையாடல்கள், கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
அதேவேளை ஓட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுடைய பெற்றோரின் தொழில் நடவடிக்கைகள், எதிர்காலத் திட்டங்கள், வருமானம் ஈட்டக் கூடிய அனைத்து செயற்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: