2 Apr 2017

வெளிவாரி கலைப் பட்டதாரி மாணவர்களுக்கான தொடர் தொலைக் கல்விப் பரீட்சைகள் ஏப்ரல் 8 இல் ஆரம்பம்

SHARE
பேராதனைப் பல்கலைக் கழகம் நடாத்தும் முதலாம் வருட 100 வீத மட்ட வெளிவாரி கலைப் பட்டதாரி மாணவர்களுக்கான  தொடர் தொலைக் கல்வி பரீட்சைகள் ; (Distance and Continuing Education) ஏப்ரல் 8ஆம் திகதி ஆரம்பமாவதாக அப்பல்கலைக் கழகம் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது.


இப்பரீட்சைகள் ஏப்ரல் 30ஆம் திகதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் மேற்படி  பரீட்சைகள் நாடெங்கிலும் வெவ்வேறு பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்ற அதேவேளை, மட்டக்களப்பில் ஆசிரியர் கலாசாலை, கல்லடி முகத்துவாரம் விபுலாநந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு புனித தெரேசா வித்தியாலயம், கல்லடி உப்போடை சிவாநந்தா தேசியக் கல்லூரி ஆகியவற்றில் நேர அட்டவடைப்படி நடைபெறும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் உதவிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: