மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியல்15 மில்லியன் ரூபாவில் கட்டி முடிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு (31.03.2017) நடைபெற்றது.
அதிபர் எம்.ஏ.எம் இனாமுல்லா தமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமஅதிதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்துவைத்தார்.
கிழக்கு மாகாணத்தில் எந்நவொரு பாடசாலையிலும் இல்லாத 400 மீற்றர் ஓடு பாதையை கொண்ட மைதானமாக அல்மனார் மத்தியகல்லூரியின் மைதானம் அபிவிருத்தி செய்யப்படும் என இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இங்கு உரையாற்றும் போது,அல்மனார் மத்திய கல்லூரிக்கு 21 மில்லியன் ரூபாவில் இன்னுமொரு மூன்றுமாடிக் கட்டிடம் அமைப்பதற்கான நிதியினை மாகாணசபை ஊடாக ஒதுக்கீடு செய்து தருவேன். முழு மருதமுனையும் நன்மையடையும் வகையில் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் உள்ளக விளையாட்டுத் தொகுதியும் ஒன்றுகூடல் மண்டபமும் அமைப்பதற்கான வேலை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.








0 Comments:
Post a Comment