மட்டக்களப்பு நகரப் பகுதி மேல்மாடித் தெருவிலுள்ள கிணற்றிலிருந்து சனிக்கிழமை காலை 01.04.2017 சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தத் தெருவிலுள்ள குறித்த சடலம் மீட்கப்பட்ட கிணறு அமைந்துள்ள வீட்டில் வைத்தியர்களான கணவன் மற்றும் மனைவி ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
அவர்களது வீட்டில் வேலை செய்யும் பெண் தற்போது தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வேலைக்காரியான அந்தப் பெண் கடந்த 27ஆம் திகதி சிசுவொன்றைப் பெற்றெடுத்ததாகவும் அந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியுள்ள வீட்டு வேலைக்காரப் பெண்ணை தற்போது பொலிஸார் தேடி வரும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஈடுபட்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment