2 Apr 2017

முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கி ஒருவர் பலி, இருவர் படுகாயம்

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு களுவன்கேணி, கோறளங்கேணியில் வெள்ளிக்கிழமை (31.03.2017) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மற்றுமிருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதிகூடிய வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து கான் ஒன்றுக்குள் குடைசாய்ந்ததில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பின்னாலிருந்து பயணித்த களுவன்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் சுஜித் (வயது 22) என்பவர் தலைப்பகுதி பலமாக நொருங்கியதால் அதிக இரத்தம் வெளியாகி மரணித்துள்ளார்.

இச்சம்பவத்தில் அந்த முச்சக்கர வண்டியில் பயணித்த களுவங்கேணியைச் சேர்ந்த மேலும் இரு ஆண்கள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: