தந்தை செவ்வாவின் 40 வது நினைவு தின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (30) மு.ப. 9.30 மணிக்கு, மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெறவள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற எற்பாடு செய்யப்பட்டுடுள்ள, இந்நிகழ்வில் மலர் மாலை அணிவித்தல், மலரஞ்சலி செலுத்துதல், நினைவுச் சுடரேற்றர், அகவணக்கம், ஆசியுரை, வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெறவுள்ளதோடு,
அறிமுக உரையினை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாக கி.துரைராசசிங்கமும், “ஜெனிவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும்” எனும் தலைப்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.அ.சுமந்திரனும், “தந்தை செல்வா” எனும் தலைப்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவும், ஆற்றவுள்ள இந்நிலையில், சிறப்புரையினை தாயகத் தலைமகன் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான் இரா.சம்பந்தன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் அனைவரைம் கலந்து கொள்ளுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments:
Post a Comment