சமூக விரோதச் செயல்களை ஒழிக்க சகலரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சமுதாயப் பொலிஸ் பிரிவு வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்து துண்டுப் பிரசுமொன்றை விநியோகித்துள்ளது.
இது விடயமான துண்டுப் பிரசுரம் ஞாயின்று 23.04.2017 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
அத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, பழம்பெரும் வரலாற்றையும் சிறப்பான கலை, கலாசார, பண்பாட்டு மரபுவழி விதிமுறைகளையும் தன்னகத்தே கொண்ட கொக்கட்டிச்சோலையில் தற்போது சமூக விரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன.
இது இப்பிரதேசத்தின் பெருமைகளைச் சீர்குலைத்து வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள மதுப்பாவனை, கள்ளச்சாராய உற்பத்தியும் பாவனையும், இளவயதுத் திருமணம், குடும்ப வன்முறைகள், வீண் சச்சரவுகள் என்பனவற்றால் சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, வறிய மக்கள் சில நுண்கடன் வழங்கும் நிறுவனங்களினால் கவரப்பட்டு கடன் பெற்று பின்னர் அவற்றை மீளச் செலுத்த முடியாது திண்டாடி தன்மானத்தை இழந்து உளத்தாக்கத்தோடு அலைகிறார்கள்.
இவற்றைத் தடுப்பதில் எல்லோரும் அக்கறை காட்ட வேண்டும்.
தம்பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வியில் அக்கறையை ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்கா வண்ணம் தொலைக்காட்சி, இசைக்கருவி மற்றும் வானொலிகளைப் பயன்படுத்த வேண்டும்,
நஞ்சற்ற மரக்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும்,
தமிழர் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடையணிய வேண்டும்,
மதுப்பாவனையுடன் ஆலயங்கள், மற்றும் பாடசாலைகளுக்கருகில் இடையூறு செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவுதல்,
புதிய நபர்கள் கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கும்பொது அதுபற்றி முன்னதாக கிராம சேவையாளருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் பல விடயங்களில் பொது விடயங்களில் பொதுமக்கள் கரிசனை காட்ட வேண்டும் என்று அந்தப் பிரசுரத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment