மட்டக்களப்பு செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின்
25 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் லவ்பேட்ஸ் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் 32 கழகங்கள் பங்குபற்றிய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதனடிப்படையில் 8 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றது. 58 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய லவ்பேட்ஸ் விளையாட்டுக் கழகம் சகல விக்கட்டுக்களையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இறுதிப் போட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கழகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் அதிதிகளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்











0 Comments:
Post a Comment