தமிழ் மக்களை ஜனாதிபதி அவர்கள் ஏமாற்ற நினைத்தால் நாங்கள் ஜனாதிபதியை ஏமாற்ற வேண்டி ஏற்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை அவர்கள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெரிய கல்லாறு விநாயகர் வித்தியாலத்தின் விழையாட்டு விழா நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
நமது நாட்டின் கௌரவ மதிப்புக்குரி ஜனாதிபதி அவர்கள் ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார் நடந்து முடிந்த யத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடைபெறுவதாக இருந்தால் இரணுவத்தில் உள்ள எந்த அதிகாரிகளுக்கும் விசாரித்து தண்டனை வழங்க இடமளிக் விடமாட்டேன் என்று ஆணித்தரமாக அதுவும் வட மாகாணத்திலே வைத்து கூறியிருக்கின்றார்.
அவரைப்பார்த்து நான் ஒன்று கூற விரும்புகின்றேன். நாங்கள் கேட்ட நீதிக்கு கூறுகின்ற விடயம் இதுதானா? உங்களை ஆட்சி பீடம் ஏற்றிய தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் கைங்கரியம் இதுதானா? வடக்கு கிழக்கு வாழ் மக்கள் நினைத்ததினால்தான் கடந்த கால கொடங்கோல் ஆடசிக்கு முடிவு கட்டினோம் என்பதனை நான் நினைவு படுத்த விரும்புகின்றேன். நாங்கள் ஆண்ட பரம்பரையினர் எவராலும் ஆளப்பட்டவர்கள் அல்ல ஆகவே தமிழ் மக்களோடு விளையாட வேண்டாம். நீங்கள் எங்களை ஏமாற்ற நினைத்தால் நாங்கள் உங்களை ஏமாற்றுவோம் என அவர் தெரிவித்தார்….
0 Comments:
Post a Comment