9 Mar 2017

முதியோர்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்த முன்வரவேண்டும் - சிவில் அமைப்பின் தலைவர் சக்திவேல்.

SHARE

( திலக்ஸ்)

முதியோர்கள் தற்காலை இளைஞர் யுவதிகளை, நல்வழிப்படுத்த முன்வரவேண்டும், முதியோர்கள் கடந்த காலங்களில் இப்பிரதேசத்திற்கு ஆறிய வேவையின் நிமிர்த்தம்தான் இளைஞர் யுவதிகள் அவர்களின் அடியொற்றி தற்போது சமூக சேவையினை மேற்கொள்ள களமிறங்கியுள்ளார்கள். ஆனாலும், தற்காலத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். என போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் தலைவர் வ.சக்திவேல் தெரிவித்தார்.


போரதீவுப் பற்று சிவில் அமைப்பின் கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் வாசம் உதவும் உறவுகள் அமைப்பும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையும் இணைந்து,  போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 முதியவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (07) உதவிகள் வழங்கப்பட்டன. இதன்போது கலந்து  கொண்டு இந்நிகழ்வில் தலைமை வகித்து கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபாவனை அதிகரிக்கப்பட்டுள்ளன என அனைவராலும் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்வாறான தவறான நெறிமுளைக்குள் தற்கால இளைஞர்களை விழ விடாமல் முதியோகர்கள் இளைஞர்களை வழிநடாத்த வேண்டும்.

மாறாக பிள்ளைகளும் முதியோர்களை சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளவேண்டும், முதியோர்களிடத்தில் நிறைந்த அனுபவங்கள் உள்ளன, முதியோர்கள் நமது நாட்டின் சொத்துக்கள் அவர்களை உரியமுறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும். முதியவர்கள் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பின் பிரதிபலன்தான் தற்போது நாம்  அனைவரும்  அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கு மாத்திரமின்றி நாட்டுக்கே தங்களது இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து தற்போது ஓய்வு நிலையிலிருக்கின்ற முதியவர்களை நாம் மறந்துவிடவோ விட்டுவிடவோ ஒருபோதும் நினைக்கக் கூடாது.

தற்காலத்தில் இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள், வலதுகுறைந்தோர் என பலரும் ஒன்றிணைந்துதான் நமது பிரதேசத்தினை முன்நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். எனவே நாம் அனைவரும் ஒருமிக்து கைகோர்த்து ஒற்றுமையுடன் செயற்பட்டால் போரதீவுப்பற்றிலுள்ள வறுமையை மிகவிரைவில் போக்கலாம். நமது பிரதேசம் சுற்றிவர வயல் நிலங்களால் நிரம்பப்பட்ட பகுதியாகும் இப்பகுதியில் அதிக நெல் வளைச்சலைத் தருகின்ற பூமியாகும் வருடா வருடம் இரண்டு போகங்களில் அதிக நெல் விளைச்சலைத் தருகின்றபோதிலும் நமது பகுதியிலும் வறுமை நிலவுகின்றது. எனவே இவ்வாறான விடையங்களைக் கருத்தில் கொண்டு முதியோர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பலரும் இணைந்து அரச, அரச சார்பற்ற அமைப்புக்களுடன் கைகோர்த்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.











SHARE

Author: verified_user

0 Comments: