9 Mar 2017

வேலையற்ற பட்டதாரிகள் நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்;டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்குமாறு பொலிஸார் கோரிய மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

SHARE
மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 16 நாட்களாக நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்;டத்துக்கு  இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு பொலிஸார்
தாக்கல் செய்த மனு நீதிவானால் நிராகரிக்கப்பட்டது.

புதன்கிழமை (08.03.2017) மட்டக்களப்பு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah  நிராகரித்து தள்ளுபடி செய்தார்.

இதனிடையே கடந்த 28ஆம் திகதி  மேற்படி வேலையற்ற பட்டதாரிகள்; நடத்திய கவனயீர்ப்புப் பேரணியின்போது,  மாவட்டச்  செயலகத்துக்கு முன்பாக நின்ற பொலிஸாரையும்  மாவட்டச் செயலக அதிகாரிகளையும்; கடமையைச் செய்யவிடாது இவர்கள் இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமூகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்திற்கு சமுகமளிக்கும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரீ. கிஷாந்த் உட்பட சங்கத்தின் ஏற்பாட்டாளர் 4 பேரும் புதன்கிழமை 08.03.2017 நீதிமன்றில் ஆஜராகினர்.
அவர்கள் நான்கு பேரையும் தலா 20,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு  நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா அனுமதியளித்துள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல்  5ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: