போரதீவுப்பற்று சிவில் அமைப்பின் கோரிக்கைக்கு இணைங்க மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் வாசம் உதவும் உறவுகள் அமைப்பு மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஆகிய அமைப்புகள் இணைந்து, போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதியவர்களுக்கு
செவ்வாய்க்கிழமை (07) உதவிகள் வழங்கப்பட்டன.
50 முதியவர்களுக்கு இன்றயத்தினம் மதிய உணவு வழங்கி சாறி, சறம், துவாய், மற்றும் லாம்பு, டோச், என்பன வழங்கப்பட்டன.
இவ்வமைப்பின் போரீவுப்பற்று இணைப்பாளரும், அப்பிரதேச சிவில் அமைப்பின் தலைவருமான வ.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா, மற்றும், போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமை;பபின் அங்கத்தவர்கள், முதியோர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment