மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ. கிஷாந்த் உட்பட ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் 4 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (08.03.2017) ஆஜராகுமாறு
நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பட்டுள்ளது.
தங்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜரகுமாறு கூறி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ. கிஷாந்த் தெரிவித்தார்.
திங்களன்று 06.03.2017 அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பாணையில் பொலிஸார் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்ய விடாது இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமுகமான நிலைமையைக் குழப்பும் வகையில் நடந்துகொண்டார்கள் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு மட்டக்களப்பு பொலிஸார் வழக்குத் தொடுத்துள்ளனர்.
பெப்ரவரி 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்; மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் வரை சென்று கவனயீர்ப்புப் பேரணி நடத்தினர்.
இவ்வேளையிலேயே, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடமையில் நின்ற பொலிஸார் மற்றும் கடமையிலிருந்த மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களின் கடமையைச் செய்யவிடாது கவன ஈர்ப்புப் பேரணி நடத்தியர்கள் இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமுகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தங்களுக்கு வேலைவாய்ப்பக் கிடைக்கும் வரை போராடுவதாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டம் 15வது நாளாகத் தொடர்கிறது.
0 Comments:
Post a Comment