மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
கல்முனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி தீடீரென பழுதடைந்து நின்றதையடுத்து பின்னல் வந்த மோட்டார் சைக்கிள் மேற்படி லெறியின் மீது மோதியதனாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த 54 வயதுடைய பெரியகல்லாற்றைச்சேர்ந்த கே.கிருபாகரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment