9 Mar 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மக்களுக்கான ஒரே கட்டமைப்பு – நடராசா

SHARE
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மக்களுக்கான ஒரே கட்டமைப்புத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று ஓர் இடம், இன்று ஓர் இடம் நாளை இன்னோரிடம் என மாhறி மாறி திரிவது அல்ல எமது செயற்பாடு கொள்கை ரீதியாக கோட்பாடு ரீதியாகத்தான் அன்றிலிருந்து இன்றுவரை நாம் செயற்பட்டு வருகின்றோம் 


என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்த தெரிவு செய்யப்பட்ட 16 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதன் கிழமை (09) பட்டாபுரம் பொதுக் கட்டத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கைளக் கையளித்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

கடந்த காலத்தில் எமது பகுதியில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக எமது பல உயிர்கள், உடமைகள் கல்வி. தொழில்வாய்ப்புக்கள், உள்ளிட்ட அனைத்திலும் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள படுவான்கரைப் பகுதியாகும். இந்நிலையில் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றிருக்கவில்லை ஆனாலும் அந்த இக்கட்டான காலகட்டத்திலும், எமது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து மக்களுக்கு சேவை செய்தார்கள் செய்தார்கள். அன்றய காலகட்டத்தில் எமது பகுதிகள் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டு வந்தன அதுமாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் சில அரசியல்வாதிகளினால் பின்தள்ளப்பட்டு வந்தன.

இருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணசபையில் 6 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்களுமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட 9 பிரதிநிதிகள்  மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் சேவை செய்து வருகின்றோம். எமது மக்களுக்கான பிரச்சனைகள் விடையத்தில் தீர்வு வேண்டும் என்ற நோக்குடன்தான் கடந்த காலத்திலிருந்து எமது தலைமைகள் செயற்பட்டு வருகின்றார்கள். இவற்றைத்தான் கடந்த தேர்தல் காலங்களிலும் மக்களுக்கு நாம் தெழிவு படுத்தியிருந்தோம். எமது மக்களும் அபிவிருத்தி வேண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கழிக்கவில்லை எமது பிரச்சனைகளக்கு தீர்வு பெற்றெடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் வாக்கழித்தார்கள்.

ஆனாலும் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்திருக்கின்ற தற்போதைய காலகட்டத்தில் நல்லாட்சி மாற்றத்திற்கு எமது தமிழ் மக்கள் செயற்பட்டிருந்தார்கள். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் வித்திட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் பசப்பு வார்த்தைகளைக் கூறித்திரிவதாக இம்மாவட்டத்திலிருக்கின்ற அரசியல்வாதிகள் எமது பகுதி மக்களிடையே கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மக்களுக்கான ஒரே கட்டமைப்புத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று ஓர் இடம், இன்று ஓர் இடம் நாளை இன்னோரிடம் என மாhறி மாறி திரிவது அல்ல எமது செயற்பாடு கொள்கை ரீதியாக கோட்பாடு ரீதியாகத்தான் அன்றிலிருந்து இன்றுவரை நாம் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறானவர்களின் கருத்துக்களை நாம் விட்டுத்தள்ளிவிட்டு எமது மக்களுக்கான தீர்வை நோக்கிய செயற்பாட்டில் நாம் முன்நிற்கின்றோம்.

கடந்த ஒன்றரை வருடங்களாக கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி செய்துகொண்டிருக்கின்றோம். இதன் நிமிர்த்தம் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்நெடுத்து வந்தாலும் மக்களுக்குரிய தேவைகள் இன்னும் பூர்தி செய்யாத நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இயன்றளவு மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது பகுதியில் சில அமைச்சர்கள் வந்து அவர்களின் முகவர்களுடாக சில உதவிகளை மக்களுக்கு வழங்கிச் செல்கின்றார்கள். அவற்றையும் மக்கள் பெற்றுக் கொள்ளுங்கள் எனெனில் அந்த நிதி அமைச்சர்களின் நிதியல்ல அது அரசாங்கத்தின் நிதியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: