9 Mar 2017

சிறிலாங்கா ரெலிக்கொம் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள்.

SHARE
சிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினால் பரவலாக வயர் மூலமான தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டு வரும் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள பழுகாமம் காத்தியர் கடைச் சந்தியிலிருந்து செல்லும் தும்பங்கேணிப் பிரதான வீதியில் இதுவரைகாலமும் சிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புக்கள் அற்ற நிலையிலேதான் இருந்த வருகின்றன. இவ்விடையத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு தொலைபேசி இணைப்புக்களைப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுப்பதாக போரதீவுப்பற்று சிவில் அமைப்பின் செயலாளர் தெய்வநாயகம் சிவபாதம் வியாழக்கிழமை(09) தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

பழுகாமம் - தும்பங்கேணி பிரதான வீதியில் ஆடு இனவிருத்திப் பண்ணை, அமுதசுரபி பால் பதனிடும் நிலையம், கால்நடை வைத்திய அலுவலகம், தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், சுகாதார பரிசோதனை நிலையம், கணணி வளநிலையம், திக்கோடை கணேச வித்தியாலயம், உள்ளிட்ட நூலகங்கள், வர்த்தக நிலையங்கள், என பல அரச திணைக்கள காரியாலயங்களும், அரச சார்பற்ற அமைப்புக்களும் அமைந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புக்களும் அமைந்துள்ளன. 

அப்குதியிலுள்ள மக்கள் சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினால் வழங்கப்படும் வயர் மூலமான தொலைபேசி சேவை இன்மையால் இணையத்தள சேவைகள் உள்ளிட்ட பல நவீன தொழில் நுட்பத்திற்குள் நுளைவது கடினமாகவுள்ளன. எனவே சம்மந்தப்பட்டவர்கள் மிகவிரைவில் இப்பகுதிக்கு சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினால் வழங்கப்படும் வயர் மூலமான தொலைபேசி இணைப்புக்களை ஏற்படுத்தித்தர முன்வருமாறு கேட்டுக் கொள்வதாக மேற்படி சிவில் அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேற்குறித்த வீதியில் வசிப்போர் தமக்கு சிலாங்கா ரெரிக்கொம் நிறுவனத்தின் வயர் மூலமான தொலைபேசி இணைப்புக்கள் தேவை என விண்ணப்பிக்குமாறும், இவ்விடையம் குறித்து தாம் கவனத்திலெடுத்து பரிசீலிப்பதாகவும், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் மட்டக்களப்பு காரியாலய முகாமையாளரை வியாழக்கிழமை (09) தெடர்புகொண்டு கேட்டபோது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: