9 Mar 2017

இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியகாரியாலயம் ஏற்பாட்டில் மகளிர் தினநிகழ்வு

SHARE
இலங்கை மனிதஉரிமைகள் அணைக்கழுவின் கல்முனைப் பிராந்தியகாரியாலயம் ஏற்பாடு செய்துள்ளமகளிர் தினநிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரைக்கும் கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைபிராந்திய இணைப்பாளர்
இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில் நடைபெறவுள்ளது.

சிறுகைத்தொழில்களில் ஈடுபடும் மகளிரை ஊக்குவித்தல் எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள மகளிர் தினநிகழ்வில் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேசசெயலகசமூகசேவை உத்தியோகத்தர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் இசிவில் சமூகப்பிரதிநிதிகள் குடும்பநல உத்தியோகத்தர்கள் மதத் தலைவர்கள் அரசசார்பான சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியாலயக் காரியாலயம் வருடம் தோறும் பலதினங்களைஉணர்வுபூர்வமான முறையில் கொண்டாடுவதுடன் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மக்களினால் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இணக்கப்பாட்டுடன் துரிதமாகதீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளமையால் மக்கள் மத்தியல் நன்மதிப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடமகளிர் தினநிகழ்வில் சிறுகைத் தொழில் தொடர்பான விடயங்கள் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவது தொடர்பான விடயங்கள் மற்றும் மகளிர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அது தொடர்பாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் கலந்துரையாடப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: