23 Mar 2017

கிழக்கு மாகாண முதலமைச்சர் வட மாகண முதலமைச்சர் சி வி விக்ேனஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் பா,சத்தியலிங்கத்துக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்,

SHARE
கிழக்கில்  டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில்  வடக்கிலிருந்து   தேர்ச்சி பெற்ற இரண்டு புகைவிசுறும் குழுவினரை அனுப்பியமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்  வட மாகண முதலமைச்சர் சி வி விக்ேனஸ்வரன் மற்றும்  சுகாதார அமைச்சர் டொக்டர் பா,சத்தியலிங்கத்துக்கு தமது  நன்றிகளை  தெரிவித்துள்ளார்,


கிழக்கு மாகாணத்தில்  அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள இடங்களுக்கு இந்தக்குழுவினர் பயணிக்கவுள்ளதுடன்  அங்கு இவர்கள் புகைவிசுறும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர்.

அண்மையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் பா,சத்தியலிங்கத்துக்குமிடையில்  இடையில்  இடம்பெற்ற  கலந்துரையாடலிலேயே  இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டது,

கிழக்கு மற்றும் வட மாகாண சுகாதாரத் துறைசார்  அதிகாரிகள் இணைந்து  டெங்கு ஒழிப்பு  தொடர்பான தமது  நடவடிக்கைகளை  முன்னெடுக்கவுள்ளனர்.

கிளிநொச்சியில்  டெங்கு நோய் பரவும்  அபாயம் நிலையில் அதனை வெற்றிகரமாக கட்டுப்பத்தி நிபுணத்துவம் மிக்க புகைவிசுறும் நடவடிக்கைகளை இந்தக் குழுவினர்  முன்னெடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே   கிழக்கில் விரைவில் டெங்குவை பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு வட மாகாண புகைவிசுறும் குழுவின் நடவடிக்கை பாரிய தூண்டுகோலாய் அமையும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்

சிறுபான்மையினரை பெரும்பான்மையாகக்  கொண்ட மாகாண சபைகள் இரண்டும் ஒன்றிணைந்து  செயற்படுவது  சிறுபான்மை சமூகங்களுக்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன் சிறுபான்மை சமூங்களின் இந்த நடவடிக்கையில்  பெரும்பான்மை சமூகம் பாடம் கற்கவேண்டிய நிறைய விடயங்கள் உள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,

இரு மாகாண சபைகளுக்குமிடையேயான  நல்லுறவு  இரு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு பாரிய நன்மையாக  அமைவதுடன் சிறுபான்மையினரின் உரிமைகளை  பெற்றுக் கொள்வதற்கான பயணத்தில்  பாரிய உந்து  சக்தியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,

கிழக்கு மாகாண மக்களுக்கு நெருக்கடியான தருணத்தில்  உதவ முன்வந்த  வட மாகாண சபையின் முதலமைச்சர் சி,வி விக்ேனஸ்வரன்,வட மாகாண சுகாதார அமைச்சர் பா,சத்தியலிங்கம் மற்றும்  வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  கிழக்கு மாகாண சபை சார்பாக தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.



SHARE

Author: verified_user

0 Comments: