கடந்த சனிக்கிழமை சம்மந்தக் ஐயாவின் தலைமையில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளடக்கிய கூட்டத்தின் பிரகாரம் மேற்படி மேற்குலக நாடுகளுக்கு 3 கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கின்றோம். முதலாவது 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் இக்காலகட்டத்திற்குள் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட வேண்டும், இரண்டாவது அவற்றை எந்த விதத்தில் நிறைவேற்றுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு மனித உரிமை அலுவலகம் ஒன்றை இலங்கைளில் நிறுவி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், மூன்றாவது இலங்கை அரசாங்கம் இப்பிரேரணையை நிறைவேற்றத் தவறும் பட்டசத்தில் ஐக்கியநாடுகள் சபையும், இந்த மேற்குலக நாடுகளும் பொறுப்புக் கூறி பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு புதிய பொறிமுறையின் மூலம் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுமுந்தன்வெளி வலம்புரி வாசகர் வட்டமும் மாதர் விராம அபிவிருத்திச் சங்கமும் இணைந்து நடாத்திய மகளிர்தின விழா செவ்வாய்க் கிழமை (14) மாலை களுமுந்தன்வெளி பொது நூலக முன்றலில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வலம்புரி வாசகர் வட்டத்தலைவர் யோ.கிவேதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ம.கருணாநிதி, மட்.களுமுன்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சி.சிவபாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கோ.கருணாகரம் மேலும் தெரிவிக்கையில்….
நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக அல்லாமல் வாழ்வதற்காக வேண்டி அகிம்சை ரீதியாகவும், ஆயுதரீதியாகவும் போராடி தோற்கடிக்கப்பட்ட ஓரு இனமாக நாங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் பல போராட்டங்களை நடாத்தி நாம் தோற்கடிக்கப்பட்ட இனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தில் உரிமைகளுக்காக போராடிய நாங்கள் தற்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடாக இராஜ தந்திரங்கள் ஊடாக வெளிநாடுகளின் அழுத்தங்களைப் இந்நாட்டு அரசின் மேல் பிரயோகித்து நாங்கள் இழந்தவற்றைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
தற்போது ஜெனிவாவிலே மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே கடந்த 2009 மே 18 ஆம் திகதி போர் மௌனிக்கப்பட்டது. இந்நிலையில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் தமிழ மக்களின் உரசியல் உரிமைக்காக போராடிக் கொண்டு வருகின்றது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிலே பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவிலே கொண்டுவரப்பட்ட அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் கொடுத்திருந்தது. இலங்கையில் நடைபெற்ற இறுத்திக்கட்ட போரிற்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டும். என்பது மாத்திரமல்லாமல் வடக்கு கிழக்கில் ஆயுதப் படைகளினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் நஸ்ட்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும். இவற்றினைவிட கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் போன்று எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதற்குரிய பொறிமுறைறைகளைக் கண்டறியப்பட வேண்டும்.
ஐ.நா விலே 2015 செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட பிரேரணைகளை நிறைவேற்றுவதற்காக ஒன்றரை ஆண்டுகள் (18) மாதங்கள் கால அவகாசங்கள் வழங்கப்பபட்டன. 2016 யூன் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் மனித உரிமை ஆணையாளர் வாய்மூலமான அறிக்கை ஒன்றை கொடுத்திருக்க வேண்டும், மேலும் இந்த வருடம் எழுத்து மூலமான அறிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். அது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற சாராம்சங்கள் 3 வீதங்கள்கூட இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, மொசுடோனியா போன்ற நாடுகள் இணைந்து இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், இக்காலப்பகுதிக்குள் இப்பிரேரணைணையை முற்று முழுதாக இலங்கை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என இந்த அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை அரசுடன் இணைந்து மேலும் 2 வருட காலம் இப்பிரேரணையை நீடிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியிருக்கின்றது என சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றார்கள். உண்மை அதுவல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கு மேலும் 2 வருடகால அவகாசம் வழங்குமாறு எந்த இடத்திலும் கூறவில்லை. மேற்குலக நாடுகள் இந்த பிரேரணையைக் கொண்டுவந்தன அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டு கொண்டுவர வேண்டாம் என்றால் அதனை அவர்கள் கொண்டுவராமலா விடுவார்கள். நாங்கள் இவற்றை இராஜதந்திர ரீதியில் சிந்திக்க வேண்டும்.
கடந்த சனிக்கிழமை சம்மந்தக் ஐயாவின் தலைமையில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளடக்கிய கூட்டத்தின் பிரகாரம் மேற்படி மேற்குலக நாடுகளுக்கு 3 கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கின்றோம். முதலாவது 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் இக்காலகட்டத்திற்குள் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட வேண்டும், இரண்டாவது அவற்றை எந்த விதத்தில் நிறைவேற்றுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு மனித உரிமை அலுவலகம் ஒன்றை இலங்கைளில் நிறுவி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், மூன்றாவது இலங்கை அரசாங்கம் இப்பிரேரணையை நிறைவேற்றத் தவறும் பட்டசத்தில் ஐக்கியநாடுகள் சபையும், இந்த மேற்குலக நாடுகளும் பொறுப்புக் கூறி பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு புதிய பொறிமுறையின் மூலம் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற 3 விடையங்களை முன் வைத்துள்ளோம்.
எனவே இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 2 ஆண்டுகள் வழங்குவதன் மூலம், எமக்கு அது சாதகமாகத்தான் வரப்போகின்றது. இந்த பிரேரணையை 2 வருடத்திற்கு நிறைவேற்றுவோம் என இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்குறுதி வழங்கியுள்ளார் . அதனை அவர்கள் நிறைவேற்றியே தீரவேண்டும். அவ்வாறில்லாவிடின் இலங்கை சர்வதேசத்தால் தண்டிக்கப்படும் நாள் அதுவாகத்தான் இருக்கும். அதைப் புரிந்து கொண்டுதான், இதற்குத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைகிப் போகின்றதே தவிர இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக அல்ல இவற்றை நிறைவேற்றா விட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும், எமக்கு நிவாரணம் கிடைப்பதற்கும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து தாங்கள் தேர்தலிலே வெல்ல வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது மேற்படி கிழக்கு மகாணசபை உறுப்பினர் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதி பயன்தரும் நூல்கனை நூலகத்திற்கு கையளித்ததோடு, மகளிர் தினம் பற்றி பேச்சுக்கள், மற்றும் மகளிருக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment