(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த உதைபந்தாட்ட ஆரம்பப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று மாலை (17.03.2017) மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.எம்.முஸ்தாக் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ரஸாக்(ஜவாத்) அவர்களும் கௌரவ அதிதியாக “சரோ பாம்” நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜூத்தீன் உட்பட விசேட அதிதிகளாக பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டிற்காக தமது வாழ்நாளை அர்பணித்த மூத்த வீரர்கள் சிலரும் இங்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா்கள். வெற்றி பெற்றவர்களுக்குரிய வெற்றிக் கிண்ணங்களையும் அதிதிகள் வழங்கிவைத்தனர்
பார்வைாயா்களுக்கான அதிஸ்ட குலுக்கல் தெரிவில் அதிஸ்ட சாலியாக தெரிவு செய்யப்பட்டவருக்கு துவிச்சக்கர வண்டி அரங்கில் வைத்து வழங்கி வெக்கப்பட்டது. இவை தவிர ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.









0 Comments:
Post a Comment